ஞாயிறு, 26 ஜூன், 2011

நுவரேலியா சீதா எலிய சீதையம்மன் ஆலயம்

பத்தினித் தெய்வமான சீதையை இராவணன் கவர்ந்து சிறை வைத்திருந்த இடமான அசேவனம்.அந்த அசோக வனம் நுவரேலியா நகரிலிருந்து பணடாரவளை செல்லும் வீதியில் சித்தாஎலிய பிரதேசத்தில் அமைந்துள்ளது. நுவரேலியா சீதா எலிய சீதையம்மன் ஆலயம்






சீதை தனக்கு எற்பட்ட நிலை வேறுயாருக்கும் நடக்கு கூடாது என்று அருள் பாலிக்கும் ஆலயம் தான் சீதா எலிய ஆலயம். எனக்கூறப்படும் சீதா எலிய கோயிலை தரிசிக்கச் சென்றோம். சிறிய இக் கோவில் அழகில் அனைவரையும் மயக்க வைக்கும். நீண்டு உயர்ந்த மரங்கள் நிறைந்த மலையைப் பின்னணியாகக் கொண்டு இது அமைக்கப்பட்டுள்ளது



சீதா அம்மனுக்கு உலகில் உள்ள ஒரே கோயில் இதுதான். முன்வாசலைத் தொட்டதுமே கோயிலின் பின்புறமுள்ள மலையின் இயற்கை வனப்பு அருவியின் சலசலக்கும் சத்தம்இ குளிர், காற்று, ராமர் சீதா, இலட்சுமணன் மூலஸ்தான தரிசனம் என யாவும் சேர்ந்து








அகமுகமும் குளிர அத்துணை இனிய அனுபவம் கிடைக்கப் பெறுகிறது கோவிலைத் தரிசிப்பதற்கு பிரதான பாதையிலிருந்து கீழே இறங்கிச் செல்ல வேண்டும். வழமையாக மலை மேலிருக்கும் கோயில்களை நோக்கி படிகளால் ஏறிச் சென்று அனுபவப்பட்ட எங்களுக்கு இது புதுமையாக இருந்தது.

கோயிலிருந்து மேலும் இறங்கினால் பாய்ந்தோடும் அருவி வரும். இந்த அருவியில்தான் இராவணனால் அசோக வனத்தில் சிறைப்பிடிக்கப்பட்டு இருந்த சீதை தினமும் நிராடி செல்வதாம்.

அந்த அருவி நீரில் நாங்கள் மனதில் ஒரு காரியத்தை நினைத்து பூ எறியும் போது பூ வானது கிழ் உள்ள ஆற்றுடன் போய் சேருமாகவிருந்தால் நினைத்த காரியம் நிறைவேறுமாம். அருவியில் தடங்கி நிக்குமானால் நினைத்த காரியம் நிறைவேறாதாம்





நானும் பூ வெறிவதற்கு பூ தோடினாற் கிடையது சரி ஒருவாறு சிதாப்பிராட்டிக்கு வைக்கபட்டிருந்த பூவை நீரோடையில் எறிந்தேன் சரியாக அது ஆற்றை வேகமாக சென்றடைந்தது . நானே மனதில் எதும் நினைக்கவில்லை . எதாவது நினைத்திருக்கலாம் என்று நினைத்தக்கொண்டு கைகள் தானாகவே கூப்பி வணங்கி நிற்கின்றன. ஸ்தான மூர்த்திகளைச் சுற்றி வந்தால் கோயில் பின்புறம் அடைத்த தடுப்புக் கம்பிகள் ஊடே ஓடும் ஆறு சலசலத்து முதலில் அழைக்கிறது.

அது மிகவும் தெளிவாகத் தெரியும் வண்ணம் சுற்றி வர மஞ்சள் நிறத்தை வட்டமாக அடித்துக் காட்டியுள்ளார்கள். அதன் அருகே ஆற்று நீர் அழகாக ஓடிக்கொண்டிருக்கிறது. மூலஸ்தானத்தைச் சுற்றி வந்தால் இடது மூலையில் பாதம் பதித்த இடத்தைப் பார்த்தவாறே அனுமார் மூலஸ்தானத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அவரை வணங்கிவிட்டு இடது புறமாகச் சென்றால் படிகளின் ஊடே இறங்கி அவர் பாதம் பதித்திருக்கும் இடத்தை அடைந்து வணங்க முடியும். வணங்கிவிட்டு நீரோடை தவழ்ந்து ஓடும் அழகையும் மலையினின்று தழுவி வரும் குளிர் காற்றையும் உட்சுவாசித்துக் கொண்டே உடலும் உள்ளமும் சிலிர்க்க மேலே ஏறி வந்தோம்.

அனுமார் சந்நிதியைச் சுற்றி வணங்கினோம். நாங்கள் சென்ற நேரம் பூசை முடியும் நேரம் ஆதலால் விபூதி குங்குமம் வழங்கினார்கள். திரும்பிப் பார்த்த போது அனுமருக்கு துணையிருக்க வந்துவிட்டார்கள் பலர். பயமற்று பக்தர்களிடையே வீரநடையில் ஓடித்திரிந்தனர்.


இராமன் சீதா கல்யாணம் காடேறல் பொன்மானைப் பிடித்துத் தரும்படி வேண்டுதல் பரதன் பாதரட்சை பெறுதல் புஸ்பவாகனத்தில் இராவணன் சீதையைக் கவர்ந்து வருதல் மற்றும் அசோகவனத்தில் சீதை அனுமார் கணையாளியுடன் சீதையைக் காணுதல் எனத் தல வரலாறு வர்ண ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன.





தீயிட்ட வாலுடன் அனுமர் திரும்பிச் சென்ற மலை கறுத்த மரங்கள் கொண்டதாகவே காணப்படுகிறது. அதுமட்டுமல்ல நிலமும் கறுப்பாக தான் இருக்கும் என்றார் ஆலய பூசகர் நாமும் சென்று பார்க முடிவு செய்து ஆலயத்திற்கு பின்னால் இருக்கும் அருவியை கடந்து பின்னால் இருக்கும் மலையின் அடிவாரத்தில் நின்று பார்த்தோம் சுற்றிலும் நிலம் நேற்று எரிக்கப்பட்ட பிரதேசம் போல காட்சியளித்தது நினைக்கவே ஆச்சரியாமாகவிருந்தது.

இவ்வாலயத்திற்கு வடக்கே ஓரு மலை அனுமாரினது முகவடிவில் காணப்படுகின்றது . அங்கிருந்த தான் சீதை நிராட வருவதை கண்ட அனுமார் அவதானித்து அந்த மலையிலிருந்து ஒரு சுரங்க பாதை யுள்ளதாம் இந்த அசோக வனத்திற்கு வருவதற்கு தற்போது முடப்பட்டுள்ளதாம்.



அழகிய சீதை ஆலயத்தை முன்பும் இரு தடவைகள் தரிசித்து இருந்தாலும் இயற்கையுடன் சேர்ந்த கோயிலின் வடிவ அமைப்பு மீண்டும் மீண்டும் சென்று தரிசிக்கத் தூண்டுகிறது.

இதிகாச கதையிலிருந்து ஒரு பகுதி சுருக்கம்

ராமாயணச் சம்பவங்களால் சிறப்பு பெற்ற திருத்தலங்கள் இலங்கையில் அதிகம் உண்டு. சீதையின் பெருமையை உணர்த்துவதாகவும், ராம- ராவண யுத்தம் நிகழ்ந்ததற்கான சரித்திரச் சான்றுகளாகவும் திகழும் அந்தத் திருத்தலங்கள் (அவ்வூரில் வழங்கப்படும் பெயர்களால்) குறித்து அறிவோமா?!
வெரகண்டோட்டா: சீதாதேவியைக் கடத்தி வந்த ராவணனின் புஷ்பக விமானம் இறங்கிய இடம் இது. ராவண கோட்டே: ராவணனது தலைநகருக்கு தென்கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள கோட்டை இது. சீதா தேவி இங்குதான் சிறை வைக்கப்பட்டிருந்தாள். சீதா கோட்டுவா: சீதாதேவி சிறைவைக்கப்பட்டிருந்த மற்றொரு கோட்டை இது. இங்கு மண்டோதரி வாழ்ந் ததாகக் கூறுவர்.அசோக் வாடிகா: சீதையைத் தேடி ஸ்ரீராமன் வருகிறான் என்பதை அறிந்த ராவணன், சீதா கோட்டுவாவில் இருந்த சீதாதேவியை ரதத்தில் ஏற்றி, இந்த இடத்துக்கு அழைத்து வந்து சிறை வைத்தானாம். சீதா கோட்டுவாவில் இருந்து அசோக் வாடிகா செல்லும் வழியில், ராவணனின் ரதம் சென்ற பாதையையும் அசோக் வாடிகாவில் சீதையின் கோயிலையும் காணலாம்.ராவணகோடா: சீதாதேவியை பல இடங்களில் ராவணன் மறைத்து வைத்திருந்தானாம். அப்படியரு மலைக் குகையையும் அதற்கான பாதையையும் உள்ளடக்கிய பகுதியே இந்த ராவணகோடா. சீதாதேவி சிறை வைக்கப் பட்ட வேறு சில இடங்கள்: நுவரேலியா அருகிலுள்ள சீத்த எலியா மற்றும் இஸ்திரீபுரா.ஸ்திரீபுரா: 100 மீட்டர் நீளமுள்ள குகைகளுடன் கூடிய மலைப் பகுதி. சீதைக்குக் காவலாக பெண்கள் பலரை ராவணன் நியமித்த இடம் இது.
சீதை கண்ணீர்க் குளம்: கணவனைப் பிரிந்த துக்கத்தில் சீதாதேவி சிந்திய கண்ணீரில் உருவான குளத்தையே கண்ணீர்க் குளம் என்கிறார்கள். இந்தக் குளத்துக்குச் செல்லும் வழி நெடுகிலும் பூத்துக் குலுங்கும் மலர்களை 'சீதை பூக்கள்' என்கிறார்கள்!கொண்ட கலை: ராவணன் தன்னைக் கடத்தி வந்தபோது, தான் செல்லும் திசையை அடையாளம் காட்டுவதற்காக... சீதாதேவி, இந்த இடத்தில் தன் அணிகலன்கள் சிலவற்றை விட்டுச் சென்றாளாம்.சீதா கூலி:கடத்தி வரும் வழியில், ராவணன் தனக்கு உண்ணக் கொடுத்த அரிசி உருண்டையைத் தூர எறிந் தாள் சீதா. அந்த உருண்டை சிதறி விழுந்த இடம்.மாலிகா தென்னா வெளி மாடா: ராவணனின் அரண்மனை அமைந்திருந்த இடம் என்கிறார்கள். தற்போது விவசாய பூமியாக காட்சி தருகிறது (அரண்மனை, கடலில் மூழ்கி விட்டதாம்!).உஷஸ்கோடா: ஸ்ரீஅனுமனது வாலில் நெருப்பு வைக்கப் பட்ட இடம். இலங்கையில் நீலாவாரி (பஞ்சமுக அனுமன்) மற்றும் இரட்டோட்டா (பக்த அனுமன்) ஆகிய இடங்களில் கோயில்கள் உள்ளன. இலங்கையில் இரட்டோட்டா எனும் இடத்தில் மட்டுமே ஸ்ரீராமனின் பெயரில் கோயில் அமைந்துள்ளது. நீலாவரி: தன்னுடன் இலங்கைக்கு வந்த வீரர்களது தண்ணீர் தாகத்தைத் தீர்க்க, ஸ்ரீராமன் தனது அஸ்திரத்தை ஏவி உருவாக்கிய திருக்குளம் இது.யுத்த கணவா: ராம- ராவண யுத்தம் நிகழ்ந்த இடம். ராவண சேனைகளுக்கும் வானரர்களுக்குமான யுத்தத்தின் பெரும்பகுதி, 'வாஸ்காமுவா' எனும் இடத்தில் நிகழ்ந்த தாம். யுத்தம் நிகழ்ந்த வேறு இடங்கள்: துணுவிலா, எலக்கே, லக்சுலா. இந்தப் பகுதிகளில் வெறும் புற்கள் மட்டுமே விளைகின்றன.கன்னியா: ராவணன், தன் தாயாருக்கு இறுதிக் கடன் ஆற்றிய இடம்.உனவாதுவா: அனுமன் தூக்கி வந்த சஞ்சீவி மலையின் சிதறல்கள் விழுந்த இடங்களில் இதுவும் ஒன்று. மற்றவை: ருமஸ்ஸலா, தொலுகண்டா, ரிட்டிகலா, தைலடி, அட்சத்தீவு ஆகிய இடங்களாகும். உனவாதுவா என்றால், 'அங்கே அது விழுந்தது' என்று பொருள்! மூலிகைகள் நிறைந்த பகுதி இது. யகங்சுலா:ராவணனின் உடல் அடக்கம் செய்யப்பட்ட பகுதி! இங்குள்ள 'திவன்' எனும் பாறையில்தான் அவனது
உடலை அடக்கம் செய்தாகவும், இலங்கையின் மன்னன் என்பதால், ராவணனின் உடலுக்கு ஸ்ரீராமன் மரியாதை செலுத்தினார் என்றும் கூறுவர்.திவிரும்போலா:சீதாதேவி, தனது கற்பின் மாண்பை உலகுக்கு உணர்த்த தீக்குளித்து மீண்ட இடம்.வந்தாரமுலே: வெற்றிக்குப் பிறகு, சீதாதேவியுடன் ஸ்ரீராமன் ஓய்வெடுத்த இடம். இங்குதான் அவர்கள் தங்களது மண வாழ்க்கையை மீண்டும் துவங்கினர் என்றும் கூறுவர்.அமரந்த கலி: போருக்குப் பின் ஸ்ரீராமரும் சீதையும் உணவு அருந்திய இடம் இது! முன்னீஸ்வரம்: ராவணனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷத்துக்கு ஆளான ஸ்ரீராமன், இலங்கையில் உள்ள முன்னீஸ்வரம் சிவபெருமானை வழிபட்டாராம். அத்து டன் நான்கு இடங்களில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்தும் பூஜித்தாராம். அந்த இடங்கள்: மணவாரி, கோகலிங்கம், திருச்சேதிஸ்வரம்



கருத்துக்கள் எழுத்து பிழையிருந்தால் சுட்டிக்காட்டவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக